Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏர்வாடி, ராதாபுரத்தில் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

ஏர்வாடி, அக்.2: நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், தென்மேற்கு பருவமை பொய்த்து போனதாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மழை இல்லாமல் விவசாய பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் கோடை காலத்தை போன்று வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகளும், வயதானவர்களும் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிவரை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோன்று ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.