Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வள்ளியூர் அருகே 6 யூனிட் குளத்து மணல் திருட்டு ஜேசிபி இயந்திரம், 2 லாரிகள் பறிமுதல்

நெல்லை, அக்.2: வள்ளியூர் அருகே அரசு அனுமதியின்றி குளத்தில் 6 யூனிட் மணல் திருடிய ஜேசிபி இயந்திரம், 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள பழவூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆவரைகுளத்திலிருந்து மணலை அரசு அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி இரண்டு டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். இதனை தொடர்ந்து ஜேசிபி இயந்திரம், இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அதிலிருந்த 6 யூனிட் மணல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து பழவூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிந்து டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் டிரைவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.