தென்காசி,செப்.17: குற்றாலத்தில் பேரூர் அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்தனர். மாநில அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் என்ற ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், இருளப்பன், முருகேசன், சுரண்டை நகர செயலாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், பேரூர் துணை செயலாளர் கருப்பசாமி, தங்கபாண்டியன், பேரூர் ஐடிவிங் வினிஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகேசன், காசிமேஜர்புரம் முன்னாள் துணைத்தலைவர் ஐயப்பன், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குற்றாலம் பேரூர் செயலாளர் கணேஷ் தாமோதரன் தலைமையில் செய்திருந்தனர்.
+
Advertisement


