Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வண்டல் மண் எடுக்க அனுமதி

குமாரபாளையம், ஆக.29: தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், நல்லாம்பாளையம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாதால், மேட்டூர் இடது கரை காலவாய் பகுதிகள் வறண்டு கிடக்கிறது. இதனால் நல்லாம்பாளையம் ஏரி நீரின்றி காய்ந்துள்ளது.

ஏரியில் உள்ள வண்டல் மண்ணை, விவசாய பயன்பாட்டுக்கு வழங்கக்கோரி, விவசாயிகள் பலரும் கனிமவளத்துறைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்ததால் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள விவசாயிகளில் ஒருதரப்பினர், வண்டல் மண்ணை பயன்படுத்தி ஏரியின் கரையை வலுப்படுத்த வேண்டும். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏரியின் கரை வலுப்படுத்த சிஎஸ்ஆர் பண்ட் பதிவு செய்வதெனவும், வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டுக்காக வழங்குவது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் சமாதானமடைந்தனர்.