திருச்செங்கோடு, ஆக. 29: திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில், 202627 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பிஇ., பிடெக் மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் மாணவர் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை தலைவர் சச்சின் முன்னிலை வகித்தார். 2ம் ஆண்டு பிரியங்கா வரவேற்றார்.
கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் அதிகாரி திவாகர் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சென்னையை சேர்ந்த சக்சஸ்வெர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அன்புத்தம்பி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ.3.40 கோடி வழங்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். கல்லூரியின் தலைமை நிர்வாகக் குழுவினர், மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். 2ம் ஆண்டு மாணவர் விஷாகன் நன்றி கூறினார்.



