Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம் பக்தர்கள் திரண்டனர்

மல்லசமுத்திரம், ஆக.28: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை குன்றின் மேல் அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கோயில் முன்பு பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நேற்று இரவு 7 மணி முதல் மலையை சுற்றி விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமனோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதே போல், வையப்பமலை குன்றின் கீழ்பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.