Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாகனம் மோதி முதியவர் பலி

மல்லசமுத்திரம், ஆக. 28: மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் கிராமம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி அருகே வேகத்தடை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர், சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முதியவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் (பொ) சுதா விசாரணை மேற்கொண்டுள்ளார்.