நாமக்கல், ஆக.28: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 31ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் மதுபாலன்
தெரிவித்துள்ளார்.



