நாமக்கல், ஆக.26: நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 890 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ரூ.9,589க்கும், மட்ட ரகம் பருத்தி குவிண்டால் ரூ.6,455க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக நேற்றை ஏலத்தில் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



