Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிதி நிறுவன அதிபர் வீட்டில் 9 பவுன் திருட்டு

நாமக்கல், மே 25: நாமக்கல்லில், நிதி நிறுவன அதிபர் வீட்டில், 9 பவுன் தங்க நாணயம் திருடு போனது. நாமக்கல் மாநகராட்சி, பழைய நரிகுறவர் காலனி தமிழ்நகரை சேர்ந்தவர் தனபால் (65). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு தீவன புல் அறுக்க சென்று விட்டனர்.

பிற்பகல் 3 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 9 பவுன் தங்க நாணயங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தனபால், நாமக்கல் போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி, தங்க நாணயங்களை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.