Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தனியார் பஸ்களில் கட்டண உயர்வை தடுக்க கோரிக்கை

திருச்செங்கோடு, ஆக. 21: நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க திருச்செங்கோடு செயலாளர் முருகேசன், மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பஸ்கள் அரசு அறிவிக்காத கட்டண உயர்வை தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்திக்கொண்டு செயல்படுகிறார்கள். இதனால் பஸ் பயணம் செய்யும் போது, மக்களுக்கும் நடத்துனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பல இடங்களில் தனியார் பஸ்கள், பொதுமக்களை இறக்கி விடுகிறார்கள்.

மாவட்ட கலெக்டர் சமீபத்தில் அறிக்கையின் வாயிலாக, தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூல் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை கொடுத்திருந்தார். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனே ஆய்வு செய்து, அரசு பஸ்சில் என்ன வசூல் செய்கிறார்களோ, அதே கட்டணத்தை தனியார் பஸ்சும் வசூல் செய்ய, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.