Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை, ஆக.21: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில், நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். விஜயகுமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முருகேசன், செந்தமிழ்செல்வி, வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.