நாமக்கல், ஆக.19: நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.36 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 1150 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர்.
திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ரூ.9333க்கும், மட்டரகம் ரூ.6699க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.36 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.



