Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

நாமக்கல், ஆக.19: மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நாளை(20ம் தேதி) மாலை 3 மணிக்கு, எருமப்பட்டி பிடிஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது. திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கு, வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையில் காலை, 11 மணிக்கு திருச்செங்கோடு பிடிஓ அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.