நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2600 டன் ரேஷன் அரிசி வரத்து
நாமக்கல், செப். 18: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து, 2600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் நேற்று வந்தது. ரேஷன் அரிசி மூட்டைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு, நாமக்கல் அருகேயுள்ள என்.புதுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
Advertisement
Advertisement