ராசிபுரம், ஆக.14: ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று, வானில் கருமேகங்கள் திரணடு வந்தது. தொடர்ந்து ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள புதுப்பாளையம், பட்டணம், ஆண்டகளூர் கேட், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள், அங்கிருந்த வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக, மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மானாவாரி நிலங்களில், மழையை நம்பி, நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



