மல்லசமுத்திரம், ஆக.14: மல்லசமுத்திரம் ஒன்றியம் மறப்பறை ஊராட்சி கருக்குளவு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார்(45). இவர் அனுமதி இன்றி கற்களை கடத்தி விற்பனை செய்து வருவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் கருங்கல்பட்டி மாரியம்மன் கோயில் அருகே தனி வருவாய் ஆய்வாளர் அசோகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். முறையான ஆவணங்கள் இல்லாமல் 6 யூனிட் கற்கள் கடத்திவந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனி வருவாய் ஆய்வாளர் அசோகன், எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சுதா வழக்குபதிவு செய்து லாரியை ஓட்டிவந்த அருள்குமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.



