Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடக்கோரி அமைச்சரிடம் மனு

நாமக்கல், ஆக.14: விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், சங்க நிர்வாகிகள் சென்னையில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜ வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், குமார பாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் ஆகியவற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஒடுவந்தூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேணடும். தமிழகத்திலுள்ள ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு இலவசமாகவும், கிராவல் மண்ணை அனைத்து பயன்பாடுகளுக்கும் 1 யூனிட், டிராக்டர் ரூ.1000க்கு வழங்கினால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.