நாமக்கல், ஆக.13: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு, ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு என்ற பெயரில், ஏற்கெனவே ரூ.497 ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
இது தற்போது ரூ.644 ஆக பிடித்தம் செய்யப்படுவதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.



