திருச்செங்கோடு, ஆக. 13: திருச்செங்கோடு மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (40). இவர் தனது டூவீலரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது, அவருடைய டூவீலர் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, டூவீலர் திருட்டில் ஈடுபட்ட ராசிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (42) என்பரை கைது செய்தனர்.
இவர் வேறு ஒரு பகுதியில் டூவீலரை திருடிக்கொண்டு வரும் போது, மீன்கிணறு பகுதியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால், அந்த வண்டியை அங்கே நிறுத்தி விட்டு, சின்னசாமியின் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை திருச்செங்கோடு நீதிபதி ரங்கராஜ் முன்பு ஆஜர்படுத்தி, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.



