Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நாமக்கல்லில் அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக.12: நாமக்கல் பூங்கா சாலையில் அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தினர், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மணியாரன் தலைமை வகித்தார. செயலாளர் ராமசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஓய்வூதிய வேலைகளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து மாற்றக்கூடாது.

குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். ஓய்வூதியர்களின் ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை முடிவு செய்வதில், தற்போது உள்ள விதிகளை மீறும் வகையும், கால தாமதத்தை தவிர்க்கவேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.