Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொத்தனூர் சந்தையில் ரூ.9.10 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

பரமத்திவேலூர், ஆக. 12: பொத்தனூரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனர். இந்த தேங்காய்களை கொள்முதல் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 16,946 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.57.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.43க்கும், சராசரியாக ரூ.52.60க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த தேங்காய் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து‌ 815க்கு வர்த்தகம் ‌நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.