Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருச்செங்கோடு அருகே டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி பலி

திருச்செங்கோடு, ஆக.12: திருச்செங்கோடு அருகே உள்ள ஆன்றாபட்டியை சேர்ந்தவர் ராஜு (60). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் சேலம் சாலையில் சென்றுள்ளார். தனியார் கல்லூரி அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த கார், டூவீலரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று ராஜூ உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.