ராசிபுரம், டிச. 9: ராசிபுரம் தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில், 9 வயதிற்குட்பட்ட பிரிவில் நிதிக் ஆரியஹான் முதலிடம், சிவபாலன் 2ம் இடம், ஜெய்வின் சூர்யா 3ம் இடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சௌமித்ரா முதலிடம், ஆதர்சனா 2ம் இடம், கவிஸ்ரீ 3ம் இடம், மணவர்கள் பிரிவில் சஞ்சித் முதலிடம், சர்வேஷ் 2ம் இடம், கார்த்திக் விக்னேஷ் 3ம் இடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் யாழினி முதலிடம், ஆத்ரிகா 2ம் இடம், பிரதீக்ஷா 3ம் இடம் பிடித்தனர். அதே போல், 16 வயது பிரிவில் ஷான்வின் முதலிடம், சாய்கிரண்ராஜன் 2ம் இடம், ஹரிஷ் 3ம் இடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் பள்ளி நிர்வாகிகள், செஸ் அகாடமி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


