நாமக்கல், டிச. 3: நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மேலாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள், மொத்தம் 450 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். திண்டுக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஹெச் ரகம் ஒரு குவிண்டால் ரூ.7555க்கும், மட்ட ரகம் ஒரு குவிண்டால் ரூ.4,400க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13.20 லட்சத்திற்கு நேற்று பருத்தி ஏலம் போனது.
+
Advertisement

