50 மூட்டை பருத்தி ரூ.90 ஆயிரத்திற்கு ஏலம்
திருச்செங்கோடு, டிச. 3: திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பட்லூர், செல்லிபாளையம், உஞ்சனை, குமாரபாளையம், களியனூர், சங்ககிரி, பரமத்திவேலூர், இறையமங்கலம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் 50 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ரூ.6479 முதல் ரூ.7401 வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.90 ஆயிரத்திற்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement