Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறுவர் பூங்காவிற்கு மின் விளக்கு வசதி: பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு, அக். 2: திருச்செங்கோடு- ஈரோடு பிரதான சாலையில் பெரிய தெப்பக்குளம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, இதன் மேற்கு கரையிலும், தெற்கு கரையிலும் பல்லாண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டன. இதன் மேற்கு கரையில், நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. தெற்கு பகுதியில் சிறுவருக்கான பூங்கா உருவாக்கப்பட்டது. இதனை தனியார் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. சிறுவர்கள், குழந்தைகள் விளையாட, அனைத்து உபகரணங்களும் நிறுவப்பட்டன.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைப்பயிற்சி மேடையும், பேவர்பிளாக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் பூங்காவுக்கு விளையாட வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரவு 8 மணிக்கு மேலும் குழந்தைகள் பூங்காவில் விளையாடுகின்றன. எனவே, இந்த பூங்காவில் போதிய மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.