Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மதுபானம் விற்ற முதியவர் கைது வீடியோ வைரலால் சிக்கினார்

மல்லசமுத்திரம், அக்.2: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மேல்முகம் கிராமம், சூரியகவுண்டம்பாளையம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(69). மாற்றுத்திறனாளியான இவர் டாஸ்மாக் சரக்குகளை வாங்கி பதுக்கி வைத்து வெளி சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். செல்போன் மூலம் சம்மந்தப்பட்ட குடிமகன்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து, சரக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.

குறிப்பாக பொன்னி ஆற்றுப்பகுதி அருகே வரவழைத்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து, திருச்செங்கோடு, மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ சதீஷ்குமார் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பொன்னி ஆற்று பகுதியில் சரக்கு விற்பனை செய்து கொண்டிருந்த போது கையும், களவுமாக சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து, 17 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.