நாமக்கல், அக்.2: நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வித்துறை, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதை கலெக்டர் மதுபாலன் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில் பேராசிரியர் திருநாவுக்கரசு, முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, நூலக அலுவலர் வேல்முருகன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எழில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


