Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் வெயில் அதிகரிப்பால் பழங்கள் விற்பனை ஜோர்

நாமக்கல், மே 1: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. கொளுத்தி வரும் வெயிலால், நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகிறது. மேலும், வெயிலால் சாலைகளில் கானல் நீர் தோன்றி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மதிய வேளையில் வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு இதமாக சாலையோரங்களில் இளநீர் மற்றும் கரும்பு சாறு, நுங்கு, வெள்ளிரி காய்கள், தர்பூசண மற்றும் முலாம்பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்கி வருகின்றனர். இனி வரும் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும். எனவே பொதுமக்கள், மதிய வேளையில் அதிகம் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.