Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

நாமக்கல், ஆக.5: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தவறிய தவெக அரசு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சினிமா பாணியில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். கர்நாடக அரசிடம் இருந்து இவ்வாண்டு உரிய காவிரி நீரை பெற்றுத்தந்து தமிழக விவசாயிகளை காக்க தவெக அரசு தவறி விட்டது. தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி தலைவிரித்தாடுகிறது. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளின் இன்னல்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் குரல் எழுப்புவார் என்று அஞ்சி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உரிமைக்காக முதல்வர் கொஞ்சமும் ஆர்வம் காட்ட வில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வதில் மட்டும் ஏன் இந்த சினிமாத் தனமான ஆர்வம். இதற்கு அரசு பதில் கூற வேண்டும். இவ்வாறு வேலுசாமி தெரிவித்துள்ளார்.