Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் தொழில்நுட்பங்களை கையாள வேளாண் அதிகாரி ஆலோசனை

பள்ளிபாளையம், ஜூலை 29:மழை இல்லாத நிலையில் பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் வகையில் நுட்பங்களை கையாளும் படி பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: நிலக்கடலை விதைத்த 30 முதல் 45 நாட்கள் பூக்கும் பருவமாகும். விழுதுகள் மண்ணுக்குள் இறங்கும் பருவம் 45 முதல் 70 நாட்களாகும். இக்காலத்தில் வறட்சி ஏற்பட்டால் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்படும்.

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். விதைத்த 40-45வது நாளில் ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் வறட்சியிலும் காய்கள் திரட்சியாக வளர உதவும். வறட்சி அதிகமாக இருக்கும் போது 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிப்பதன் மூலம் இலைகளிலிருந்து நீர் ஆவியாவது தடுக்கப்படும். நிலக்கடலை வரிசைகளுக்கு இடையே கரும்புச் சருகு அல்லது தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு அமைப்பது நல்லது. மக்காச்சோளத்தில் ஆண் பூ வெளிவரும் போதும், கதிர் பிடிக்கும் பருவத்திலும், அதிக நீர் தேவைப்படும். விவசாயிகள் வறட்சியைத் தாங்கும் வீரிய ஒட்டு ரகங்களைப் பயன்படுத்தலாம்.