Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மகிரிப்பேட்டையில் ரூ.1.77 கோடிக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 29: நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் 1,284 மூட்டைகள், உருண்டை மஞ்சள் 402 மூட்டைகள், பனங்காளி மஞ்சள் 17 மூட்டைகள் என மொத்தம் 1,703 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14,302 முதல் ரூ.20,029 வரையும், உருண்டை மஞ்சள் ரூ.9,902 முதல் ரூ.17,449 வரையும், பனங்காளி மஞ்சள் ரூ.8,679 முதல் ரூ.31,569 வரை ரூ.1.77 கோடிக்கு ஏலம்போனது