Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராசிபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது; 150 கிலோ பறிமுதல்

ராசிபுரம், அக்.28: ராசிபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கிய பெண்ணை, உணவு பாதுகாப்புதுறையினர் கைது செய்து, 150 கிலோ பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை கடத்தி கோழிபண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்றுவருவதாக, மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தீவிரமாக விசாரித்து வந்தார். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வந்தனர். அப்போது, ராசிபுரம் சுப்பராயன் தெருபகுதியில் உள்ள ஒருவீட்டில் திடீர் சோதனை செய்தனர். அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

அங்கிருந்த பெண்னை விசாரித்தபோது அனிதா(36), என்பதும் ரேஷன் அரியை வாங்கி, இது போன்று பல ஆண்டுகளாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார், நாமக்கல் உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ராசிபுரம் வந்த உணவுபாதுகாப்புதுறை சப் இன்ஸ்பெக்டர் சித்திக், ரேஷன் அரிசி பதுக்கிய அனிதாவை கைது செய்து, அவரிடமிருந்த 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து, போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.