Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வே மேம்பால பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சேந்தமங்கலம், மே 28: நாமக்கல் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வாகன ஓட்டிகள் எளிதில் திருச்சி, துறையூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல புறவழிச் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சேந்தமங்கலத்தில் இருந்து நைனாமலை பொட்டணம், மருர்பட்டி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் சேலம், கரூர் அகல ரயில் பாதையில் மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனை கோயமுத்தூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாலத்தின் உறுதித் தன்மை, மழைநீர் வடிகால் வாய்க்கால். பாதுகாப்பு சுவர்கள் ஆகிவை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் குமரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் கோட்ட பொறியாளர் அகிலா, உதவி கோட்ட பொறியாளர்கள் அருணகிரி, தமிழரசி, உதவி பொறியாளர்கள் அருண் கார்த்திக், பிரேம்குமார், சையது ராசிம், விக்னேஷ்,பிரபாகரன், கார்த்திக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.