Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சேந்தமங்கலம் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சேந்தமங்கலம், ஜூலை 24: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி ஊராட்சி, மேதர்மாதேவி ஏரிக்குள், ஒரு கும்பல் காசு வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையில் போலீசார், அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். போலீஸ் பிடியில் 3 பேர் மட்டும் சிக்கினர். 10க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (25), தேவா (19), கௌதம் (28) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து, பணம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.