திருச்செங்கோடு, ஜூலை 23: தனியார் பஸ்களில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாதவன் (பொ) கடந்த இரு வாரங்களாக, தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரியுடன் இணைந்து, தனியார் பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அதில், 12க்கும் மேற்பட்ட பேருந்துகளை சோதனை செய்து அறிக்கை வழங்கப்பட்டது. நேற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்து அறிக்கை வழங்கப்பட்டது. எந்த காரணம் கொண்டும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெறும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
+
Advertisement
