நாமகிரிப்பேட்டை, ஆக.18: நாமகிரிப்பேட்டை பகுதிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு ஆட்டோக்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். நாமகிரிப்பேட்டை முக்கிய சாலைகள் மற்றும் கடைவீதிகளில், தினசரி ஏராளமான சரக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி அதிக பாரம் ஏற்றிச்செல்லப்படுகிறது. பாரம் அதிகமாக இருப்பதால், இந்த வாகனங்கள் மெதுவாக செல்வதுடன், சாலையின் ஒரு பகுதியை அடைத்துக்கொண்டு செல்வதால், பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சில சரக்கு ஆட்டோக்களில் பாதுகாப்பான முறையில் பாரங்கள் கட்டப்படாமல் இருப்பதால் பொருட்கள் சரிந்து விழும் அபாயமும் உள்ளது.



