Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 18: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில், வரும் 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனியில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தலைமையில் வரும் 20ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, மக்கள் நலப் பணிகள் மற்றும் வரவிருக்கும் அரசியல் முன்னெடுப்புகள் மற்றும், நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர்

தெரிவித்துள்ளார்.