Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொல்லிமலையில் கனமழையால் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

சேந்தமங்கலம், ஆக. 17: கொல்லிமலையில் பெய்த கனமழையால், இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சீதோசன நிலை முற்றிலும் மாறி சில்லென்று குளிர்காற்று வீசுகிறது. காலையில் மலைப்பாதையில் மேகமூட்டம் மலைகளில் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

சுதந்திர தினத்துடன் கூடிய வார விடுமுறை தினமான நேற்று கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  சேலம், கரூர், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் டூவீலர், கார்களில் கொல்லிமலைக்கு வந்திருந்தனர். கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, சினி பால்ஸ், நம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்தனர்.