Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரூ1.2 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, ஜூன் 15: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் விற்பனை டெண்டர் மூலம் நடந்தது. இதில் பூலாம்பட்டி, சங்ககிரி, அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், தர்மபுரி, பென்னாகரம், தலைவாசல், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தனி வாகனங்களில் மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9400 முதல் ரூ.17099 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9200 முதல் ரூ.13521 வரையிலும், பனங்காளி ரூ.8002 முதல் ரூ.32159 வரையிலும் விற்பனையானது. இதில் மொத்தம் 1100 மூட்டை மஞ்சள் ரூ.1.2 கோடிக்கு விற்பனையானது.