Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏஐடியூசி மாவட்ட குழு ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 15: திருச்செங்கோடு நகர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியூசி மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு, மாநில குழு முடிவுகள் சம்பந்தமாகவும், எதிர்கால கடமைகள் பற்றியும் விளக்கி பேசினார். மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், குமார், முருகேசன், கோபிராஜ், ஜெயராமன், பஞ்சாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு, காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

44 தொழிலாளர் நல சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் புதிய ஓய்வூதிய ஆணை பெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதிய தொகையை அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.