Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக பாஸ்கர் பொறுப்பேற்பு

நாமக்கல், மே 15: நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பதவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட அதிமுக புதிய செயலாளராக, முன்னாள் எம்எல்ஏவும், நாமக்கல் மாநகர அதிமுக செயலாளருமான பாஸ்கரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். புதிய மாவட்ட செயலாளர் பாஸ்கர் நேற்று, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிமுகவினர், நாமக்கல் வந்து மாவட்ட செயலாளர் பாஸ்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கொண்டதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் பாஸ்கர் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் நேற்று வந்துள்ளது. புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர், கடந்த 25 ஆண்டாக நாமக்கல் நகர அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். நகர்மன்ற தலைவர் மற்றும் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்

இருந்துள்ளார்.