Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொல்லிமலையில் வீட்டின் முன் தவறி விழுந்து பூசாரி பலி

சேந்தமங்கலம், மே 14: கொல்லிமலை வாழவந்தி நாடு ஊராட்சி திண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (65). கோயில் பூசாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவர், விழுந்து கிடப்பதை குடும்பத்தினர் யாரும் கவனிக்கவில்லை. அடுத்த நாள் காலையில் பார்த்தபோது, சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்தித்து பார்த்து விட்டு பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.