Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

நாமக்கல், மே 14: தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த 8ம் தேதி வெளியானது.

நாமக்கல் மாவட்டத்தில், 196 பள்ளிகளை சேர்ந்த 8,966 மாணவர்கள், 9,394 மாணவிகள் என மொத்தம் 18,360 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளில், 8,633 மாணவர்கள், 9,184 மாணவியர் என மொத்தம் 17,817 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது 97.04 சதவீத தேர்ச்சியாகும். பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளிக்கு வருகை தந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று சென்றனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.