Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மல்லசமுத்திரத்தில் ரூ.1.18 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், மே 14: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், வாரம் தோறும் புதன்கிழமையன்று பருத்தி ஏலம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்தில் மங்களம், பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, ராமாபுரம், பருத்திப்பள்ளி, சோமணம்பட்டி, கருங்கல்பட்டி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், 60கிலோ எடைகொண்ட 44 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் ரூ.7999 முதல் ரூ.9999 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.5799 முதல் ரூ.6209 வரையிலும் என மொத்தம் ரூ.1.18 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

சேலம், ஈரோடு, கோவை, அவிநாசி ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் எடுத்தனர். அடுத்த ஏலம் வரும் 20ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள்

தெரிவித்தனர்.