Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எருமப்பட்டி அருகே விவசாயியை தாக்கிய தாய், மகன் கைது

சேந்தமங்கலம், ஜூன் 11:நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (60), விவசாயி. இவரது தம்பி துரைசாமி (55). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதனை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் சில வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக அண்ணன், தம்பி இருவருக்கும் நேற்று முன்தினம் நிலம் பிரித்துக் கொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த துரைசாமியின் மனைவி பூமணி, அவரது மகன் பூவரசன் ஆகியோர் கந்தசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கந்தசாமி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பூமணி, பூவரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.