நாமக்கல், ஆக. 10: நாமக்கல்லில் போதைபொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், நேற்று காலை நடைபெற்றது. சேலம் ரோடு, பொன்நகர் பகுதியில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். எம்எல்ஏ திலீப், மாவட்ட எஸ்பி யாதவ் கிரீஷ் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 500க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். நகரில் சுமார் 3 கிமீ தூரம் வரை மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணி, டிஎஸ்பி ராஜேஸ்வரன், போதைபொருள் தடுப்பு மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement



