Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது

நாமகிரிப்பேட்டை, மே 9: நாமகிரிப்பேட்டை அருகே கொட்டகைக்குள் புகுந்து கோழிகளை விழுங்கிய மலை பாம்பு சிக்கியது. தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் துணை தொழிலாக கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் வீட்டின் அருகே கோழிக்கொட்டகை அமைத்து, 100க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழி கொட்டகைக்குள் புகுந்து, அங்கிருந்த கோழிகளை விழுங்க தொடங்கியது. கோழிகள் கத்திய சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வடிவேலு வெளியே வந்து பார்த்தபோது, மலைப்பாம்பு கோழிகளை விழுங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது குறித்து, ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், அந்த பாம்ைப அருகில் இருந்த மலைப்பகுதிக்கு ெகாண்டு சென்று விட்டனர்.