Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர் பலி

சேந்தமங்கலம், மே 6: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முத்துக்குமார் (27). இவரது நண்பர் சங்கர் (30). இருவரும் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவார பகுதியான பள்ளம்பாறையில், மாங்காய் அறுவடை செய்யும் பணியில் இருந்து வந்தனர். பணி முடிந்து 3ம் தேதி இரவு முத்துக்குமார், சங்கர் இருவரும் டூவீலரில் மூலக்குறிச்சி செல்வதற்காக, சேந்தமங்கலத்தில் இருந்து ராசிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, படத்தியான்குட்டை பஸ் நிறுத்தம் அருகே பேளுக்குறிச்சியில் இருந்து மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்த கார், வேகமாக டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.